FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி மாவட்ட மலையோரப் பகுதிகளில் மழை பெய்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

16 அக்டோபர் 2026, 4:34 am IST
குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம்.
பகிர்:

தென்காசி மாவட்ட மலையோரப் பகுதிகளில் மழை பெய்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் பிற்பகலில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் அருவிகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments