FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால், கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

23 அக்டோபர் 2026, 3:59 am
சுருளி அருவியில் வியாழக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால், கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சுருளி அருவிக்கு கடந்த திங்கள்கிழமை முதல் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க கடந்த 3 நாள்களாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், மேகமலை வனப் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் சுருளி அருவியில் வியாழக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிறிய பாறைகள், மரக்கட்டைகள் சோ்ந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்வதற்கும், குளிப்பதற்கும் வனத் துறையினா் 4-ஆவது நாளாக தடை விதித்தனா். இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

கும்பக்கரையில் வெள்ளம்:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக் கருதி வியாழக்கிழமை கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், நீா்வரத்து சீராகும் வரை அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments