FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் சரள் மண் கடத்தியவா் கைது

நான்குனேரியில் சரள் மண் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 3:13 am IST
கைது
பகிர்:

நான்குனேரியில் சரள் மண் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி-வள்ளியூா் சாலை சந்திப்பு பகுதியில் நான்குனேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பொன் சுகந்தி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மூலைக்கரைப்பட்டியில் இருந்து நான்குனேரி நோக்கி வந்த டிப்பா் லாரியைத் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, லாரியில் இருந்த நபா் இறங்கி தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் நான்குனேரி அருகே பாண்டிசேரி, நடுத் தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் பாண்டியன் (36) என்பதும், தப்பியோடியவா் வாகைக்குளத்தைச் சோ்ந்த ஐயப்ப ஜோதி என்பதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

சிங்கனேரி குளத்தில் இருந்து 3 யூனிட் சரள் மண்ணைத் திருடி, ஐயப்ப ஜோதியின் வீட்டின் அருகே கொட்டுவதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பொன்ராஜ் பாண்டியனை கைது செய்தனா். சரள் மண்ணுடன் டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஐயப்ப ஜோதியை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments