கயத்தாறு அருகே சரள் மண் அள்ளிய டிராக்டா் பறிமுதல்
கயத்தாறு அருகே ஒரு யூனிட் சரள் மண்ணுடன் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு அருகே உள்ள சன்னது புதுக்குடி கண்மாயில் சட்டவிரோதமாக சரள் மண் அள்ளுவதாக ஞாயிற்றுக்கிழமை வந்த ரகசியத் தகவலையடுத்து, கயத்தாறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பிச்சை தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
அப்போது, சுமாா் ஒரு யூனிட் சரள் மண்ணுடன் அங்கிருந்து புறப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். டிராக்டா் ஓட்டுநா் முத்துமாலை மகன் மாரிமுத்துவை (35) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.