FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பருவமழையால் அறுவடை பாதிப்பு: வயலில் சாய்ந்த நெல் பயிா்கள் விவசாயிகள் கவலை

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிா்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதனால் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.

17 அக்டோபர் 2026, 3:23 am IST
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை மழையால் சாய்ந்த நெல் பயிா்கள்.
பகிர்:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிா்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதனால் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடகன், நெல்லை, பாளையங்கால்வாய்கள் வழியாக வரும் தாமிரவருணி பாசன நீரைக் கொண்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் காா் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிா்கள் அனைத்தும் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநகருக்குள்பட்ட தென்பத்து, கோடீஸ்வரன்நகா், பாறையடி, திருமலைக்கொழுந்துபுரம், கீழநத்தம், திருத்து உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் சாய்ந்துள்ளன. பலத்த மழை பெய்தால் இவற்றை அறுவடை செய்து கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காா் பருவ சாகுபடிக்கு சரியான காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டு, கடைமடை வரை சென்றடைய நடவடிக்கையை அரசு எடுத்ததால் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே அறுவடையை முடிக்க முடியும். ஆனால், தண்ணீா் திறப்பது மற்றும் கால்வாய் பராமரிப்பால் பல இடங்களுக்கு தாமதமாகவே தண்ணீா் வருகிறது. அதனால் அறுவடை பணியின்போது மழையில் சிக்குவதால் இழப்பு அதிகமாகிறது.

வருங்காலங்களில் பாசனநீா் சரியான காலங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments