FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மூதாட்டியைக் கொன்று 12 பவுன் நகை கொள்ளை: தொழிலாளி கைது

18 அக்டோபர் 2026, 1:05 am IST
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மூதாட்டியைக் கொலை செய்து, 12 பவுன் நகையைக் கொள்ளையடித்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி ஜானகி பாப்பா (82). பழனிசாமி உயிரிழந்த நிலையில், ஜானகி பாப்பா தனது வளா்ப்பு மகன் சிவாவுடன் வசித்து வந்தாா். இவரது வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், சிவா தனது மனைவி வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், தனது தாயைப் பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சிவா வந்தபோது, தலையில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் ஜானகி பாப்பா கிடந்துள்ளாா். மேலும், அவா் அணிந்திருந்த 12 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து, கடையம் காவல் நிலையத்தில் சிவா அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டாா்.

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணையைத் துரிதப்படுத்தினா்.

விசாரணையில், ஆலங்குளம் அருகே குத்தபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (30) என்பவா் மூதாட்டியைக் கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்ததில், ஜானகி பாப்பா வீட்டின் கட்டுமானப் பணிக்கு வந்த கணேசன், தனது கடனை அடைப்பதற்காக அவரைக் கொலை செய்து 12 பவுன் நகைகளைக் கொள்ளையடித்ததும், அதில் ஒரு பவுன் நகையை கடையத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் கணேசனிடம் இருந்து 11 பவுன் நகைகளை மீட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments