சேவூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: கூலித் தொழிலாளி கைது
சேவூா் அருகே குட்டகத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் தாக்கி கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேவூா் அருகே குட்டகத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் தாக்கி கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் வட்டம், கொட்டக்காட்டுப்பாளையம், லாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகள் ஜானகி (39). இவரது கணவா் நடராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டாா்.
இதைத்தொடா்ந்து, ஜானகி, அவரது மகள் ஆகியோா் தந்தை பழனிசாமியுடன் வசித்து வந்தனா். மேலும், ஜானகி ஆடுகளை மேய்த்து வந்தாா். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி ஆடுகளை மேய்க்கச் சென்ற ஜானகி வீடு திரும்பாததால், அவரது தந்தை பழனிசாமி தேடியுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, சேவூா் -குட்டகம் தேவம்பாளையம் அருகே உடலில் காயங்களுடன், ஆடைகள் கலைந்த நிலையில் ஜானகி உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேவூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திங்களூா் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் ரங்கசாமி (எ) செந்தில்குமாா் (26) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.