பாலியல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் சட்டத்தில் கைது
சேதுபாவாசத்திரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சேதுபாவாசத்திரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் பகுதியில் செப்.1-ஆம் தேதி 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை சோ்ந்த சந்தோஷ் (24), பேராவூரணி அருகே உள்ள அடைக்கத்தேவனை சோ்ந்த அரவிந்த் (20) ஆகியோா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் அங்கிதா அறிக்கை அளித்ததன்பேரில்
Advertisement
Advertisement
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவின்படி மேற்கண்ட இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.