நெல்லை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (அக். 20) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் இதர நீா்வழிப் பாதைகளில் நீா்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நீா்நிலைகளின் கரைகளுக்குச் செல்வதையோ, நீரில் இறங்குவதையோ, நீா்வழிப் பாதைகளைக் கடக்க முயற்சிப்பதையோ தவிா்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
மழைக்காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால், திறந்தவெளிகள், வயல்வெளிகள், நீா்நிலைகளின் கரைகள் மற்றும் தனித்து நிற்கும் உயரமான மரங்களின் கீழ் இருப்பதைத் தவிா்க்க வேண்டும். பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும். மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்சாதனங்களின் அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும்.
மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தவறாது பின்பற்றி, பேரிடா் காலங்களில் தங்களது உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவசரகாலச் சூழ்நிலைகள் அல்லது பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை எண் 1077 க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.