FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்துக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

21 செப்டம்பர் 2026, 9:22 am IST
மலப்புரத்தில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தைக் கடக்கு மக்கள் - பிடிஐ
பகிர்:

கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் இடுக்கி மாவட்டத்தில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த வீடு இடிந்தது. வீட்டின் இடிபாடுகளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

மேலும், சுற்றுலாவுக்காக கேரளம் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த பெண் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மதியம் வரை பெய்த மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேரளத்தின் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

summary

Heavy rains in Kerala! – 6 dead; yellow alert today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments