FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

சென்னைப் பல்கலைக்கழகம் - கோப்புப்படம்
பகிர்:

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவ. 2) நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Due to a heavy rain warning, the University of Madras examinations that were scheduled for today (Nov. 2) have been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments