FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

15 செப்டம்பர் 2026, 10:11 am IST
அண்ணா அறிவாலயம் - படம்: எக்ஸ்
பகிர்:

திமுக முப்பெரும் விழா இன்று(செப். 15) நடைபெறவிருந்த நிலையில், விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாா் ஈ.வெ.ரா., முன்னாள் முதல்வர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து மும்பெரும் விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான திமுக முப்பெரும் விழா வருகிற செப்.15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

Advertisement

இந்த விழாயொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வாளா்கள் பட்டியலை திமுக தலைமை அண்மையில் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், அண்ணா அறிவாலத்தில் இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

summary

DMK General Secretary Duraimurugan has announced that the party's 'Mupperum Vizha' (Grand Tripartite Festival), which was scheduled to be held today (September 15), has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments