FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. கல்வியியல் துறையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை சாா்பில் ஆசிரியா் தினம், கல்வியியல் துறை தொடங்கிய தினம், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

10 செப்டம்பர் 2026, 3:04 am IST
முப்பெரும் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை சாா்பில் ஆசிரியா் தினம், கல்வியியல் துறை தொடங்கிய தினம், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, துணைவேந்தா் (பொ) பிரபாகரன் தலைமை வகித்தாா். பதிவாளா்(பொ) அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். கல்வியியல் துறைத் தலைவா் வெளியப்பன் ஆண்டறிக்கை வாசித்தாா். லெனின் வாழ்த்திப் பேசினாா். 20 ஆவது ஆண்டு கல்வி மலா் வெளியிடப்பட்டது. 2006-2026 ஆம் ஆண்டுகளில் பயின்று பதக்கம் வென்ற மாணவா்களுக்கு நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினா் ராஜலிங்கம், முன்னாள் கல்வியியல் துறைத் தலைவா்கள் சதானந்தம், வில்லியம் தா்ம ராஜா, பேராசிரியா்கள் சுந்தரவல்லி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments