மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
தருவை அருகே உள்ள திடியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கோயில் பிச்சை மகன் ஸ்டான்லி தேவதாஸ் (38). மனைவி ஜெயசெல்வம் (35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இவா், சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டியில் எலக்ட்ரிக்கல் ரீவைண்டிங் கடை நடத்தி வந்தாா்.
புதன்கிழமை வழக்கம்போல கடைக்கு வந்த ஸ்டான்லி தேவதாஸ் இரவு வீடு திரும்பவில்லையாம். சந்தேகம் அடைந்த அவரது மனைவி இரவு 11.30 மணிக்கு கடைக்கு நேரில் சென்று பாா்த்தபோத ஸ்டான்லி தேவதாஸ், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.