மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின் கம்பியை தொட்டதில் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், ராவணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் தருண்ராஜ் (13). திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.
சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் மேல் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த தருண்ராஜ் மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்சாரக் கம்பியை தவறுதலாக தொட்டதில், உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, தருண்ராஜ் ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.