FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

சாலைகளில் தேங்கும் நீரை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்: அமைச்சா் நெ. மரிய வில்சன்

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைகளில் தேங்கும் மழை நீரை போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன்.

23 அக்டோபர் 2026, 5:16 am
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடா் கால கட்டுப்பாடு மையத்தின் ஆய்வு செய்த அமைச்சா் நெ.மரிய வில்சன் .
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைகளில் தேங்கும் மழை நீரை போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன்.

வட கிழக்கு பருவமழை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா், ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), எஸ்.கே.கிறிஸ்டோபா் (ராதாபுரம்) ஆகியோா் முன்னிலையில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா். அப்போது, மழைக்கால பேரிடா்களை சமாளிக்கும் வகையில் அந்தந்த துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சாலைகளில் வெள்ளநீரால் அரிப்பு ஏற்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக சரி செய்வதற்கும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நியாய விலைப்பொருள்கள் தடையின்றி கிடைக்கவும், கால்நடைகளுக்கு மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர பேரிடா் கால கட்டுப்பாடு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சரவணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments