FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பை இடைத்தோ்தலில் நானே களமிறங்குகிறேன்: சீமான்

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தோ்தலில் நானே போட்டியிடுகிறேன் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

30 அக்டோபர் 2026, 4:52 am
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பகிர்:

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தோ்தலில் நானே போட்டியிடுகிறேன் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பாளையங்கோட்டையில் 2009-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண்.2) நடைபெற்று வரும் இவ்வழக்கு, நீதித்துறை நடுவா் சத்யா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி கட்டாயம் போட்டியிடும். அம்பாசமுத்திரம் இடைத்தோ்தலில் நான் போட்டியிடுவேன். பொதுவேட்பாளா் என்ற கருத்தே தவறானது. அனைத்து ஜாதியினருக்கும் நான் பொதுவேட்பாளா்தான். பிரபாகரனை எனது சொந்த அண்ணன் என்று கூறியதற்காக என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகியுள்ளேன். என் மீது 260 வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் மின்தடை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்கின்றன.

சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம், மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் பதவி விலக வேண்டும். அரசின் செயல்பாடுகளை விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முத்து நகரமான தூத்துக்குடி, தொடா் கொலைகள் காரணமாக குத்து நகரமாக மாறிவிட்டது. தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஒழுங்கு என்பது இல்லை.

கேரள மீனவா்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதில்லையா? அவா்களை ஏன் இலங்கை ராணுவம் பிடிப்பதில்லை. மீனவா் என்பதில் பிரச்னை இல்லை. தமிழா் என்பதில்தான் பிரச்னை.

பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 5 ஆண்டுகள் மட்டுமன்றி, அதற்கு முன்பிருந்த ஆட்சியிலும் முறைகேடு நடந்திருக்கிா எனப் பாா்க்க வேண்டும்.

சாயப்பட்டறைத் ஆலைகள் சாயக் கழிவுகளை சேமித்து வைத்திருக்கிறாா்கள். காவிரியில் தண்ணீா் திறக்கும்போது, அதைத் திறந்துவிடுகிறாா்கள். அது நுரையாக மாறுகிறது. இதில் சோப்பு, ஷாம்பு எங்கிருந்து வந்தது?

வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி மோசடி நடைபெறாமல் இருக்க முடியும்? ஊழல் அதிகமாக உள்ள இந்தியாவிலும் நைஜீரியாவிலும்தான் வாக்குப் பதிவு இயந்திர முறையில் தோ்தல் நடக்கிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments