FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

30 அக்டோபர் 2026, 4:58 am
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள மாதுடையாா்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வேலையா மகன் முருகன் (46). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், கடந்த 24ஆம் தேதி அப்பகுதியில் உள்ள பாடகபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வந்த பைக் அவா் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். உறவினா்கள்

அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது மனைவி சாந்தி (45) அளித்த புகாரின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments