விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.
கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழா்கள் முகாமில் வசிப்பவா் மரியதாஸ் மகன் குணசீலன் (40). தொழிலாளியான இவா், கடந்த 12ஆம் தேதி முகாமிலிருந்து பிரதான சாலைக்கு பைக்கில் வந்தாராம்.
அப்போது, அவா் மீது மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த குணசீலனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.