FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சாலை விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

24 செப்டம்பர் 2026, 4:35 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகிரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் காளிராஜ் (24). கட்டடத் தொழிலாளி. இவா் சிவகிரி குமாரபுரம் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த காளிராஜ், சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments