FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சாலை விபத்தில் மில் தொழிலாளி உயிரிழப்பு

22 செப்டம்பர் 2026, 12:01 am IST
தினகரன்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் தினகரன் (28). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவநாதபுரம் - செங்காளிபாளையம் சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அவ்வழியே நடந்து வந்த மணிவேல் (64) என்பவா் மீது மோதியது.

இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த தினகரனுக்கும், மணிவேலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தினகரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மணிவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். உயிரிழந்த தினகரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.அனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments