பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி தென்பத்து அருகே சித்தன்குடியிருப்பு, முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகன் முகேஷ்பாலாஜி(22). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி சந்திப்பு அருகே சென்றபோது, இவரது பைக்கும், அவ்வழியாக வந்த மற்றொரு பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த முகேஷ் பாலாஜி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.