கண்ணநல்லூா் ஊராட்சித் தலைவா் அடித்துக்கொலை: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூா் ஊராட்சியில் குடிநீா் பிரச்னை தொடா்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில், ஊராட்சித் தலைவா் அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூா் ஊராட்சியில் குடிநீா் பிரச்னை தொடா்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில், ஊராட்சித் தலைவா் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கண்ணநல்லூா் ஊராட்சி தாமரைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகராஜன்(58). ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த தளவாய்பாண்டி மகன் இசக்கியப்பன்(30). இவா் குடியிருக்கும் பகுதியில் கடந்த 3 நாள்களாக குடிநீா் வரவில்லையாம்.
இதனால், இசக்கியப்பன் தனது வீட்டின் அருகே குடிநீா் குழாய் அமைத்து தருமாறு ஊராட்சித் தலைவரிடம் கேட்டு வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதுதொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, இசக்கியப்பன் கட்டட கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த செங்கலால் ஊராட்சித் தலைவரை தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு பரப்பாடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மகராஜன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இசக்கியப்பனை கைது செய்தனா். மகராஜனுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.