குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாநகரில் காவல் வாகனத்தை சேதப்படுத்தி, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரில் காவல் வாகனத்தை சேதப்படுத்தி, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை, சாந்தி நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுடலை கணபதி (28). கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இவா், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் காவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்து, காவல் வாகனத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். மேலும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தாராம்.
இதையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.