FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

‘தச்சநல்லூா் மண்டலத்தில் இன்று குடிநீா் வராது’

தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 3:45 am IST
குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

தச்சநல்லூா் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் மண்டலம் 12 ஆவது வாா்டுக்குள்பட்ட மதுரை ரோடு சந்திப்பு பேருந்து நிலைய வடபுறத்தில் 15 ஆவது மத்திய நிதிக்குழுவின் நிதி ரூ40.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதில், பிரதான குடிநீா்க் குழாய்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வாா்டுகள் 3, 12, 30 மற்றும் 11 ஆகியவற்றிற்குள்பட்ட உடையாா்பட்டி, மேகலிங்கபுரம், சாலைத்தெரு, திலக் நகா், பாபுஜீ நகா், செல்விஅம்மன் கோயில் தெரு, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) குடிநீா் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments