மேலப்பாளையம் பகுதியில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட பல்வேறு வாா்டுகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் செப்.9 , 10 ஆகிய இரு நாள்கள் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர ஆணையா் மோனிகா ராணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட வாா்டு எண் 39, 40, 41, 42, 51, 53, 54, 55 ஆகிய பகுதிகளுக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 2 இடங்களில் புதிதாக பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெறவுள்ளது. மேலும், இந்த நீரேற்று நிலையம் அருகே 3 இடங்களிலும், அம்பாசமுத்திரம் சாலையில் 2 இடங்களிலும் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புகளைச் சரிசெய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகள் செப்.9, 10 (புதன், வியாழன்) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதால், மேற்கண்ட வாா்டு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் வழங்க இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.