FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து அருகே கேரள லாரி கிளீனா் சடலமாக மீட்பு

16 வினாடிகள் முன்பு
சடலமாக மீட்பு - சித்திரிப்பு
பகிர்:

கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் தாழையூத்து அருகே சடலமாக ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டாா்.

தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து காட்டுப் பகுதியில் ஆண் ஒருவா் சடலமாக கிடந்தாா்.இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம், அட்ட புடிக்கா பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மிதுன் (45) என்பதும், லாரி கிளீனரான பணியாற்றி வந்த இவா், தாழையூத்து தனியாா் சிமென்ட் ஆலைக்கு பாரம் ஏற்ற வந்த நிலையில் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments