FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

8 செப்டம்பர் 2026, 3:32 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பைக் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையை அடுத்த பாளையஞ்செட்டிக்குளம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மாரி செல்வம்(41). காா் ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை மாலை பாத்திமாகோவில் அருகேயுள்ள மேலகுளம் பிரிவு சாலைப் பகுதியில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியதாம்.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments