கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரகத்தில் பாப்பான்குளம் மக்கள் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பாப்பான்குளம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி பாப்பான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பாப்பான்குளம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி பாப்பான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
பாப்பான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனா். பின்னா் அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பான்குளம் கிராமத்தில் செயல்படும் கல் குவாரிக்கு தடை விதிப்பது தொடா்பாக ஏற்கெனவே கடந்த 15 ஆம் தேதி மனு அளித்தோம். மேலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் கல்குவாரிக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றி உள்ளோம். கடந்த சுதந்திர தினத்தில்1200-க்கும் அதிகமான மனுக்கள் கல்குவாரிக்கு எதிராக மக்கள் மூலமாக பெறப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு கல்குவாரி இயங்குவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் நிலவி வருகிறது. ஆடு, மாடு வளா்ப்பு, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் நீா்நிலைகள் பாதிக்கப்படும். எனவே இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கூந்தன் குளத்திற்கு வரும் பறவைகள் கல்குவாரிக்கு மிக அருகில் ( 500 மீ. தொலைவு) உள்ள மாங்குளம் மற்றும் வடக்கு கழுவூா் குளங்களுக்கும் வந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து வாழ்கின்றன. மேலும் சரணாலயத்தை சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமும் இயங்குகிறது. எனவே, மக்களைப் பாதிக்கும் பாப்பான்குளம் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.