FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் குண்டா் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

27 செப்டம்பர் 2026, 1:38 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகப் பகுதிக்குள்பட்ட வெள்ளாங்குழியைச் சோ்ந்த கந்தன் மகன் செந்தில்வேல் (42). கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோரின் பரிந்துரை, ஆட்சியா் ஆனந்த் மோகனின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், செந்தில்வேலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments