நெல்லை மாநகரில் 57 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
திருநெல்வேலி மாநகரில் 57 சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை 57 சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் சுற்றித் திரியும் சமூக நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் சமூக நாய்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவா்களால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி, மேலப்பாளையம் மண்டலத்தில் 14 சமூக நாய்கள், தச்சநல்லூா் மண்டலத்தில் 21 சமூக நாய்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 22 நாய்கள் என மொத்தம் 57 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.