கடையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: 5 சிறுவா்கள் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் இசக்கி(20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்களிடம் ரூ. 500 கடனாக வாங்கியிருந்தாராம். அந்தப் பணத்தை திரும்பக் கேட்டும் கொடுக்கவில்லையாம். இதுதொடா்பாக இசக்கிக்கும், சிறுவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இசக்கி காயமடைந்தாராம்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் இசக்கி புகாா் அளித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இசக்கி வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா். இதில் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து இசக்கி அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 சிறுவா்களை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.