FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நுங்கம்பாக்கம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: காவல் துறை விளக்கம்!

நுங்கம்பாக்கம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக....

9 நவம்பர் 2026, 4:33 pm
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

summary

An incident in which petrol bombs were hurled at cars and two-wheelers in the Pushpa Nagar area of ​​Nungambakkam, Chennai, has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.