FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குலசேகரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

திருவட்டாறு மேற்கு வட்டாரத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின்  அறிமுகக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

திருவட்டாறு மேற்கு வட்டாரத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின்  அறிமுகக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவர் வழக்குரைஞர் டி. காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோகன் சாலமன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சான்றிதழ் வழங்கினார். மேலிடப்பார்வையாளர் ராமலிங்க ராஜா முன்னிலை வகித்தார்.

இதில் புதிய நகரத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட  வழக்குரைஞர் விமல் (குலசேகரம்), கோபகுமார் (பொன்மனை), ஜெஸ்டின் பால்ராஜ் (திற்பரப்பு), பர்ணபாஸ் (பேச்சிப்பாறை), ரவிதாஸ் (அயக்கோடு), விஜூகுமார் (சுருளகோடு) ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  முன்னாள் நிர்வாகிகளான எபனேசர், தோமஸ், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். வேலப்பன் வரவேற்றார். ஐஎன்டியூசி நிர்வாகி பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments