ரயில் முன் பாய்ந்து தொழிலாளி சாவு
களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை அருகே குறுமத்தூர் - கழுவன்திட்டை ரயில் பாதையில், திங்கள்கிழமை காலையில் ரயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் களியக்காவிளை அருகேயுள்ள உண்டனாகுழி பகுதியைச் சேர்ந்த பாறை உடைக்கும் தொழிலாளியான மோகன் (45) என்பது தெரியவந்தது. மேலும், மது அருந்தும் பழக்கம் உடைய இவருக்கு கடன் தொல்லையும் இருந்து வந்ததாம். இவரை விட்டு மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனராம். இந்நிலையில் இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
தூக்கிட்டுத் தற்கொலை: கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி. கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் மனைவி தீபாவுடன் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.