ஏற்றக்கோட்டில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவட்டாறு அருகே ஏற்றக் கோட்டில் தமிழக அரசின் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவட்டாறு அருகே ஏற்றக் கோட்டில் தமிழக அரசின் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு, ஊராட்சித் தலைவர் ரூஸ் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயசுதா முன்னிலை வகித்தார்.
இதில்,மருத்துவர்கள் அருள் செல்வன், கார்த்திக் உள்பட ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.
Advertisement
Advertisement
முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளர் எல். சார்லின் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் செய்திருந்தனர். இம்முகாமில் 905 பேர் பயனடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.