FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்ற 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை கேரளத்துக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையும் மீறி ரேஷன் அரிசி, மணல் கடத்திச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் இக்னேசியஸ் சேவியர், ஓட்டுநர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் சனிக்கிழமை அதிகாலையில் மஞ்சாலுமூடு பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Advertisement

அப்போது அப் பகுதி வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று இடைக்கோடு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தொடர்ந்து காரை சோதனையிட்டதில் சாக்கு மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு வந்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments