FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெங்கு விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சுகாதாரத் துறை சார்பில், குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத்  தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் ஆலோசனையின்பேரில், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் கொசுக்களை அழிப்பது குறித்தும்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

முகாமுக்கு, கன்னியாகுமரி ரயில் நிலைய மேலாளர் பெஸ்டஸ் வில்சன் தலைமை வகித்தார். கொட்டாரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் மிதுன் டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசுக்களை ஒழிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும் ரயில் பெட்டிகளில் கொசு உற்பத்தியாவது குறித்தும், அவற்றை அழிக்கவும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்க்கீஸ்ராஜா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் கிங்சன், ரயில் நிலைய சுகாதார அதிகாரி ஆதிரை, சுகாதார ஆய்வாளர்கள் செல்வமுருகன், பிரசன்ன குமார், ஆன்றனி, சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments