FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமை வகித்தார்.

 குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்கவேண்டும். ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்க ரப்பர் இறக்குமதியை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

 மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, இந்திய கம்யூனிஸ்ட்  மாவட்டச் செயலர் எஸ்.இசக்கிமுத்து, மதிமுக மாவட்டச் செயலர் எஸ்.வெற்றிவேல், விடுதலைசிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலர் பா.திருமாவேந்தன், மேற்கு மாவட்டச் செயலர் மாத்தூர் ஜெயன், இந்திய கம்யூனிஸ்ட்  மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினார்.

இதில் முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் எம்எல்ஏ ஆர்.லீமாறோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.மாதவன், என்.எஸ்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, சிங்காரன், சிவகோபன், வட்டாரச் செயலர் மீனாட்சிசுந்தரம், சிபிஐ மாவட்ட துணைச் செயலர் கே.சி.துரைராஜ், மாவட்டப் பொருளாளர் வி.கோபி, நகரச் செயலர் ஆர்.இசக்கிமுத்து, ராஜு, அனில்குமார், அருணாச்சலம், ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் கோபால், கிறிஸ்.ஜெரால்ட், மகாராஜபிள்ளை, கபிரியேல், காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேவசிகாமணி, அசோக், தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments