ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம்
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு தடை செய்துள்ளதை கண்டித்து
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு தடை செய்துள்ளதை கண்டித்து, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டத் தலைவர் ஷிபு , மாவட்ட பொதுச் செயலர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ராஜன் வரவேற்றார். அமைப்பின் நிறுவனர்- தலைவர் அன்புமாரி, அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் இசக்கி ஐயப்பன், சிவசேனை மாநில இளைஞரணித் தலைவர் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
இதில், மாநில நிர்வாகிகள் அம்மன் ஆறுமுகம், மாரியப்பன், மாவட்ட நிர்வாகிகள் தங்கபாண்டி, செந்தில், சொர்ணகுமார், ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் ஐயப்பன், திவாகர், கண்ணன், இசக்கிராஜா, மகளிரணி உச்சிமாகாளி, கவிதா, செல்லம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாவட்டப் பொதுச் செயலர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.