நாகர்கோவிலில் இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு
இந்திய மாணவர் சங்க 19ஆவது மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ஜெ.ஜெஸின் தலைமை வகித்தார்.
இந்திய மாணவர் சங்க 19ஆவது மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஜெ.ஜெஸின் தலைமை வகித்தார். சங்க இணைச் செயலர் எஸ்.விஜய் சங்க கொடியேற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய மாவட்டத் தலைவராக எஸ்.பி.பதில் சிங், செயலராக ஜெ.ஜெஸின் உள்பட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோணம் அரசுக் கல்லூரியில் போதுமான ஆசிரியர்களை நியமிப்பதோடு, புதிய பாடப்பிரிவுகளை உருவாக்கி கல்லூரியை விரிவாக்கம் செய்ய வேண்டும்; குமரி மாவட்டத்தில் அரசு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.லிஜின் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.ரசூல் பீவி வரவேற்றார். லட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.டேவிட் ராஜ போஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் டீ. எபிலைசியஸ் ஜோயல், மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.தங்கமோகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் சி.ஆர்.ராஜகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.