மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய திருவிழா இன்று தொடக்கம்
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய திருவிழா திங்கள்கிழமை (ஆக.6) தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய திருவிழா திங்கள்கிழமை (ஆக.6) தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை மாலை 6.45 க்கு ஜெபமாலை புகழ்மாலையை தொடர்ந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றிவைத்து திருப்பலிக்கு தலைமை வகிக்கிறார். கொன்னக்குழி அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார்.தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும்.
விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் நடைபெறும்.
விழாவின் 2 ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கடையல் பங்கு அருள்பணியாளர் ஜாண்பிரிட்டோ தலைமை வகிக்கிறார். தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் மறையுரையாற்றுகிறார். விழாவின் 7 ஆம் நாள் காலை 9 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. நாஞ்சில் பால் இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை வகிக்கிறார். சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி தாளாளர் அருள்பணி மரியவில்லியம் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து 12 மணிக்கு அன்பு விருந்து நடைபெறும். விழாவின் 9 ஆம் நாள் காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. துண்டத்துவிளை பங்கு அருள்பணியாளர் பீட்டர் தலைமை வகிக்கிறார். முளகுமூடு போப் ஜாண்பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் அருள்பணி ஜார்ஜ் பொன்னையா மறையுரையாற்றுகிறார். பின்பு முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாள் காலை 9 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் சிற்பு திருப்பலி, சுதந்திரதினவிழா, அன்னையின் விண்ணேற்பு தினவிழா ஆகியவை நடைபெறும். பாளையன்கோட்டை மறைமாவட்ட முதன்மை பணியாளர் சேவியர் டெரன்ஸ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து பகல் 11 மணிக்கு தேர் பவனி நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர், பங்குப் பேரவை நிர்வாகிகள், விழாக்குழுவினர், பங்குமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.