வரதட்சிணை கொடுமை: கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அப்பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அப்பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). இவருக்கும் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த ராஜன் (33) என்பவருக்கும் இடையே கடந்த 2015ஆண்டு திருமணம் நடைபெற்றதாம். திருமணத்தின் போது விஜி வீட்டார் 50 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை வரதட்சிணையாக வழங்கினராம்.
இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களுக்குப் பின்னர், ராஜன் வீட்டார் விஜியிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, அவரை வீட்டை விட்டு வெளியேற்றினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ராஜன், அவரது சகோதரி சரஸ்வதி (40), சரஸ்வதியின் கணவர் ராஜு (45) ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.