தக்கலை அரசுப் பள்ளியில் விழிப்புணர்வுப் போட்டிகள்
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றன.
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றன.
ஆக.1முதல் 3ஆம் தேதி வரை ஊரகப் பகுதியிலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவில் 1- 5ஆம் வகுப்பு வரை ஓவியப் போட்டி, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சுப்புலட்சுமி தொடங்கிவைத்தார். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் மரிய பாக்கிய சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாரதா செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.