FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

72ஆவது சுதந்திர தின விழா: காங்கிரஸ் சார்பில் நல உதவிகள்

சுதந்திர தின விழாவையொட்டி, காங்கிரஸ் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

சுதந்திர தின விழாவையொட்டி, காங்கிரஸ் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
மார்த்தாண்டம் அருகே சாங்கையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு,  எஸ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். சுதந்திர தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.  இதில், கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் என்.ஏ. குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் செல்வகுமார், மாவட்ட சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங், உண்ணாமலைக்கடை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ், மாவட்டச் செயலர்கள் அருள்தாஸ், லூசியாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சேவாதளம் சார்பில் இரவிபுதூர்கடையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, உண்ணாமலைக்கடை பேரூராட்சி சேவாதளத் தலைவர் அஜின்மோன் தலைமை வகித்தார். செறுகோல் ஊராட்சி சேவாதளத் தலைவர் சினு, மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆல்பர்ட், ஜிஜோ, மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேவாதளத் தலைவர் சி. ஜோசப் தயாசிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து,  உறுதிமொழியேற்று, நலிந்தோருக்கு நல  உதவிகளை வழங்கினார். வட்டார சேவாதளத் தலைவர்கள் கிறிஸ்டன்சென், ரீகன், விஜயகுமார், யூஜின், கட்சி நிர்வாகிகள் கொடுங்குளம் ரீகன், ஜோஸ்வா, சர்குணதாஸ், நசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குழித்துறையில்...
குழித்துறையில் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் லைலா ரவிசங்கர் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் இ.ஜி. ரவிசங்கர், குழித்துறை நகரத் தலைவர் பினு நிர்மல், சிறுபான்மைப் பிரிவு நகரத் தலைவர் எட்வின், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயகுமாரி, ராஜம், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரோஜாவனம் முதியோர் இல்லத்தில்...
நாகர்கோவில் வெள்ளாளர்காலனியில் உள்ள  ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு- பாதுகாப்பு மையத்தில் சுதந்திரதின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
  விழாவுக்கு, முதியோர் இல்ல இயக்குநர் சமூகசேவகர் அருள்கண்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி,  முதியோர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முதியோர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.  இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments