நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, புலம் பெயர்வோர் நல அமைப்பினர் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்வதேச புலம் பெயர்வோர் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி தலைமை வகித்தார்.
வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டை இழந்து வாடும் தொழிலாளர்களும், சிறையில் வாடும் தொழிலாளர்களும் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், கடலோர மீனவத் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நலன் காக்கும் சட்டங்களை இயற்றி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மனித உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆல்வின்ஜோஸ், புலம்பெயர்வோர் நலன்காக்கும் அமைப்பின் சகுந்தலா, ஏஞ்சல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.