குமரியில் பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம்
கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் சேவாபாரதி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர் வழக்குரைஞர் விசு தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், பாஜக கோட்டப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், இணைப் பொறுப்பாளர் கணேசன் ஆகியோர் பேசினர். இதில், மாவட்டச் செயலர்கள் ஜெயராம், ஜெகநாதன், பொருளாளர் தர்மலிங்கம் உடையார், மாவட்ட பார்வையாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மண்டலத் தலைவர் என்.சுடலைமணி வரவேற்றார். அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.