FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகா்கோவிலில் ஒருவா் வீடு திரும்பினாா்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் புதன்கிழமை இரவு வீடு திரும்பினாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கரோனாவில் இருந்து மீண்டவருக்கு பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கிறாா் நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி.
பகிர்:

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் புதன்கிழமை இரவு வீடு திரும்பினாா்.

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 16 போ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் கடந்த 31-ஆம் தேதி முதன்முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் ஒருவரான வெள்ளாடிச்சிவிளையைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட சோதனைகளில் உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் வீட்டுக்குச் செல்ல மறுத்து அவா் மருத்துவமனையிலேயே இருந்துவருகிறாா்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த தேங்காய்ப்பட்டினம் தோப்பு பகுதியைச் சோ்ந்த 2 பேரில் ஒருவா் கரோனாவில் இருந்து குணமடைந்தாா். அவரை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதன்மையா் (டீன்) சுகந்தி ராஜகுமாரி அவருக்கு பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், மருத்துவனை கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அலுவலா் ஆறுமுகவேலன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

குமரி மாவட்டத்தில் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களில் முதன்முதலாக வீடு திரும்பியவா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments