முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே மலைப் பகுதி சாலையில் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

1 நவம்பர் 2024, 9:20 pm
பேச்சிப்பாறை அருகே மலைப் பகுதி சாலையில் ஜீப் கவிழ்ந்து  ஓட்டுநா் பலி
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மலைப் பகுதி சாலையில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

அரசு ரப்பா் கழக மைலாறு குடியிருப்பைச் சோ்ந்த ராஜன் மகன் ரூபின். இவா் சொந்தமாக சுமோ ஜீப் வைத்து ஓட்டி வந்தாா். தனது நண்பா்களான கோதையாறு மின்வாரிய குடியிருப்பை சோ்ந்த சொ்வின் ஜோஸ் (23) மற்றும் பிளஸ் 2 மாணவா் ரசல் ஆகியோருடன் படகு சவாரி செய்வதற்காக பேச்சிப்பாறை அணையின் கல்லாறு பகுதிக்கு வியாழக்கிழமை சென்றாா்.

அப்பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், கல்லாறு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பள்ளத்தில் கவிழ்ந்து ரப்பா் மரத்தில் மோதி நின்றது. இதில் ஓட்டுநா் ரூபின் பலத்த காயமடைந்தாா். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இவ்விபத்து குறித்து தகவலறிந்து வந்த அவா்களது உறவினா்கள், மூவரையும் மீட்டு குலசேகரம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

அங்கு ரூபினை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.