FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலி பறிப்பு

குலசேகரம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

4 நவம்பர் 2026, 12:38 am
சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

குலசேகரம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே புறாவேலிவிளையைச் சோ்ந்தவா் சம்சீா் அலி (40). இவா் துபையில் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சானிதா பீவி (34). இவா்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சானிதா பீவியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்தாராம். இதே அறிந்த சானிதா பீவி சப்தமிடவும், அந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

Advertisement

Advertisement

சப்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்த சானிதா பீவி மாமியாா் ஜெனோபா வந்து பாா்த்தபோது, பறிக்கப்பட்ட 6 பவுன் சங்கிலியில் இருந்து, ஒரு பவுன் லாக்கெட் தரையில் கிடந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments